Homeசெய்திகள்சினிமாசமுத்திரக்கனி நடிக்கும் 'ராமம் ராகவம்' .... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ …. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

சமுத்திரக்கனி நடிக்கும் ராமம் ராகவம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சமுத்திரக்கனி நடிக்கும் 'ராமம் ராகவம்' .... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் திரு. மாணிக்கம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இவரது நடிப்பில் ராமம் ராகவம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரானானி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யா, பிரமோதினி ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு அருண் சிலுவெரு இசையமைத்திருக்கும் நிலையில் துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படம் ஆனது அப்பா – மகன் உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.சமுத்திரக்கனி நடிக்கும் 'ராமம் ராகவம்' .... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் ஏற்கனவே 2025 பிப்ரவரி 14-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் 2025 பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ