சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரு. மாணிக்கம் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.சமுத்திரக்கனி தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் முன்னாடி இயக்குனர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் பல படங்களை ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் திரு. மாணிக்கம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து பாரதிராஜா, அனன்யா, வடிவுக்கரசி, நாசர், தம்பி ராமையா, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தினை ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி இருக்கிறார். ஜி பி ஆர் கே சினிமாஸ் இந்த படத்தினை தயாரிக்க விஷால் சந்திரசேகர் இதற்கு இசை அமைத்துள்ளார். அடுத்தது எம் சுகுமார் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.