இலங்கையில் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் பிரபல நடிகை
இலங்கையில் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஸ். வெளி மாநிலங்களைச் சேர்ந்த வௌ்ளைச் சருமத்திற்கு மத்தியில், நிலத்தின் நிறத்தில் இருந்து பாகுபாடுகளை கடந்து பவர்புல் நாயகியாக உருவெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஸ். தன் விடாமுயற்சியால், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அவரது திரை வாழ்வில் மைல் கல்லாக அமைந்த திரைப்படம் காக்கா முட்டை. இப்படத்தின் வெற்றி அவரை முன்னனி நாயகியாக உயர்த்தியது. இதையடுத்து, வட சென்னை, நம்ம வீட்டுப்பிள்ளை, கனா ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
கமர்ஷியல் நடிகையாக இல்லாமல், சிறந்த கதாபாத்திரத்தை வழங்கும் நடிகையாக அவர் திகழ்ந்தார். ஃபர்ஹானா, தீராத காதல், தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பனசுந்தரி போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அடுத்து அவரது நடிப்பில் கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.
திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், இலங்கை சென்றுள்ளார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். ஐஸ்வர்யா ராஜேஸின் வருகையை அறிந்த ரசிகர்கள் அவரை காண முண்டியடித்துச் சென்றனர். ஐஸ்வர்யாவுடன் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா மற்றும் நடிகை மீனாட்சி கோவிந்தராஜனும் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.