தலைவர் 171 மிரட்டலான டீசர் தயார்… பிரபல தெலுங்கு இயக்குநர் தகவல்…
- Advertisement -
தலைவர் 171 படத்தின் டீசர் தயாராகி விட்டதாக பிரபல தெலுங்கு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ரஜினிகாந்த், இந்த ஆண்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்திற்கு பிறகு ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, நெல்லை, மும்பை, புதுவை என மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அண்மையில் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனிடையே ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இது அவரது 171-வது படமாகும். இப்படத்தின் போஸ்டரும் அண்மையில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தலைவர் 171 படத்தின் டீசர் தயாராகி விட்டதாகவும், அதை தான் பார்த்து அசந்துபோய் விட்டதாகவும் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். விரைவில் டீசரை வௌியிட படக்குழு அறிவிப்பு வெளியிடும் என்றும் அவர் தனியார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.