விமர்சனங்கள் எழுதும் ஜோக்கர்களை தனக்கு பிடிக்காது என அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம் அனிமல். இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக ராஷ்மிகா, தந்தையாக அனில் கபூர் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளனர். ப்ரீதம், விஷால் மிஸ்ரா, மனன் பரத்வாஜ், ஷ்ரேயாஸ் பூரணிக், ஜானி, ஆஷிம் கெம்சன் ஆகியோர் கெனிமல் படத்திற்கு இசை அமைத்துள்ளார். டி.சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வௌியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. அப்பா மகன் உறவை பேசும் இத்திரைப்படம் வெளியான நாள் முதலே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் இத்திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. வசூலையும் குவித்து வருகிறது. அதே சமயம் வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் இத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன.
இத்திரைப்படம் முதல் நாளில் 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படம் வெளியான 4 நாட்களில் 425 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டியிடம் கேட்டபோது, விமர்சனங்கள் எழுதும் ஜோக்கர்களை தனக்கு பிடிக்காது என அவர் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.