Homeசெய்திகள்சினிமாஅஜித்துக்கு வில்லனாகவும் சஞ்சய் தத்..... 'விடாமுயற்சி' லேட்டஸ்ட் அப்டேட்!

அஜித்துக்கு வில்லனாகவும் சஞ்சய் தத்….. ‘விடாமுயற்சி’ லேட்டஸ்ட் அப்டேட்!

-

துணிவு படத்திற்கு பிறகு அஜித் தனது 62 வது படத்தில் நடிக்க இருக்கிறார். விடாமுயற்சி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இது சம்பந்தமான அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியானது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் தொடங்க இருந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஒரு சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விரைவில் இந்த படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் விடாமுயற்சி படத்தின் பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதன்படி இந்த படத்தில் திரிஷா, தமன்னா உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும் மங்காத்தா படத்திற்கு பிறகு ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் அஜித்துடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அர்ஜுன் தாஸ் இதில் மற்றொரு வில்லனாக நடிக்க இருக்கிறார் .

சஞ்சய் தத் விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ