சந்தானம் பட நடிகர் சேஷு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நடிகர் சேஷு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொல்லு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் வேலாயுதம், வீராப்பு கொஞ்சம் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர். இவர் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் சேஷு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மார்ச் 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் கூட அவரின் உடல்நலம் தேறி வருவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதேசமயம் இன்று டிஸ்டார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சேஷுவுக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரை நீக்கியவுடன் அவரின் உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. தனது நகைச்சுவை திறனால் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த நகைச்சுவை நடிகர் சேஷுவின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.