Homeசெய்திகள்சினிமாசந்தானத்தின் 80s பில்டப் படத்தின் கலக்கலான ட்ரெய்லர் வெளியானது!

சந்தானத்தின் 80s பில்டப் படத்தின் கலக்கலான ட்ரெய்லர் வெளியானது!

-

- Advertisement -

நடிகர் சந்தானம் ஹீரோவாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வெளியான கிக் திரைப்படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. சந்தானத்தின் நடிப்பில் உருவாகி வரும் இன்னும் சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சந்தானம் 80s பில்டப் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்க ஜாக்பாட் படத்தை இயக்கிய கல்யாண் இதனை இயக்குகிறார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், கே எஸ் ரவிக்குமார், தங்கதுரை, மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. விலை உயர்ந்த கத்தி ஒன்றை அபகரிக்க நினைக்கும் கும்பலுக்கும் சந்தானத்திற்கும் இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என இந்த ட்ரெய்லரின் மூலம் தெரிகிறது. மேலும் எமதர்மராஜா, சித்திரகுப்தன், பேய்கள் என காமெடியான கதை அம்சங்களையும் கொண்டுள்ளது. எனவே இந்த படம் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் படத்தை போல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ