கிக் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சந்தானம் டி டி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிக் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை பார்ச்சூன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.
அருண் ஜான்யா இசையமைத்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் செந்தில், கோவை சரளா மன்சூர் அலிகான், தம்பி ராமையா, ஒய் ஜி மகேந்திரன், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்சன் காமெடி கலந்த கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த படத்தின் கலக்கலான டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.