Homeசெய்திகள்சினிமாசந்தானம் நடிக்கும் 80s பில்டப் படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட்!

சந்தானம் நடிக்கும் 80s பில்டப் படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

நகைச்சுவை நடிகரான சந்தானம் தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டி டி ரிட்டன்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை சந்தானம் நடித்த படங்களிலேயே டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் அதிக வசூலை பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து வெளியான கிக் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி, ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சந்தானம், 80s பில்டப் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜாக்பாட் படத்தை இயக்கிய கல்யாண் இதனை இயக்குகிறார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து ராதிகா ப்ரீத்தி, ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், கே எஸ் ரவிக்குமார், தங்கதுரை, மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜக்கோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் 80 காலகட்டத்தில் நடப்பது போன்று காமெடியான கதைகளத்தில் உருவாகியுள்ளது. மேலும் பில்டப் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகப் போவதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ