Homeசெய்திகள்சினிமாடெவில்ஸ் டபுள்..... சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

டெவில்ஸ் டபுள்….. சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -
kadalkanni

சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு எனும் காமெடி கலந்த ஹாரர் திரில்லர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.டெவில்ஸ் டபுள்..... சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! அதைத்தொடர்ந்து 2019ல் தில்லுக்கு துட்டு 2 திரைப்படமும் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்தது கடந்த 2023 ஆம் ஆண்டு பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் சந்தானம். இந்த படமும் காமெடி கலந்த ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் – DEVIL’S DOUBLE என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். டெவில்ஸ் டபுள்..... சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்க நடிகர் ஆர்யா இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 21) நடிகர் சந்தானத்தின் 45 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் சந்தானம் ஸ்டைலிஷான லுக்கில் காணப்படுகிறார். அடுத்தது இந்த போஸ்டரில் இப்படம் 2025 மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

MUST READ