Homeசெய்திகள்சினிமாசந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டன்ஸ் 2'..... ஷூட்டிங் எப்போது?

சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டன்ஸ் 2’….. ஷூட்டிங் எப்போது?

-

சந்தானம் நடிக்கும் டிடி ரிட்டன்ஸ் 2 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டன்ஸ் 2'..... ஷூட்டிங் எப்போது?

நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து ஹீரோவாக உருவெடுத்து தற்போது வரை பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 இல் தில்லுக்கு துட்டு எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. அடுத்ததாக 2019-ல் தில்லுக்கு துட்டு 2 திரைப்படமும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ராம்பாலா இயக்கத்தில் வெளியான இந்த இரண்டு படங்களுமே காமெடி கலந்த ஹாரர் கதை களத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் சந்தானம் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதால் தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகமான டிடி ரிட்டன்ஸ் படத்தை கையில் எடுத்தார் சந்தானம். இந்த படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி வசூலிலும் பட்டையைக் கிளப்பியது. இந்த படத்தை எஸ் பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார். சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டன்ஸ் 2'..... ஷூட்டிங் எப்போது?அதேசமயம் டிடி ரிட்டன்ஸ் 2 படமும் உருவாகும் என்று நடிகர் சந்தானம் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி டிடி ரிட்டன்ஸ் இரண்டாம் பாகத்தை நடிகர் ஆர்யா தயாரிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே இதன் படப்பிடிப்பு எப்போது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ஷூட்டிங் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டில் டிடி ரிட்டன்ஸ் 2 (தில்லுக்கு துட்டு 4) படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ