நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர். தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்கள் மனதை வென்றார். அதே சமயம் ஹீரோவாகவும் களமிறங்கி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சந்தானம் நடிப்பில் இங்க நான்தான் கிங்கு எனும் திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்பு செழியன் தயாரிக்கிறார்கள். டி இமான் இதற்கு இசை அமைக்கிறார். இதில் சந்தானத்துடன் இணைந்து பிரியாலயா, விவேக் பிரசன்னா தம்பி ராமையா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற மே 10ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
- Advertisement -