Homeசெய்திகள்சினிமாசந்தானம் நடிக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் முக்கிய அறிவிப்பு!

சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

-

சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முக்கிய அறிவிப்பு!சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நகைச்சுவை நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக பல படங்களில் கலக்கி வருகிறார். அந்த வகையில் தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேசமயம் சமீபத்தில் வெளியான டி டி ரிட்டன்ஸ் மற்றும் 80ஸ் பில்டப் திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சந்தானம் மேலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளியான டிக்கிலோனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் யோகி, சந்தானம் ஆகியோரின் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைக்கிறார்.சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முக்கிய அறிவிப்பு!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ இன்று காலை 11 மணியளவில் வெளியாகும் என பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ