Homeசெய்திகள்சினிமாசந்தானம் நடிக்கும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

சந்தானம் நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

-

- Advertisement -

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அதன்படி தொடர்ந்து பட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ், கிக், 80ஸ் பில்டப் போன்ற படங்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து 2024 பிப்ரவரி 2ம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தானம் நடிக்கும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சந்தானம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் என் ஆனந்த் இயக்குகிறார். மேலும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த படத்திற்கு “இங்க நான் தான் கிங்கு” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கமாக கவுண்டமணியின் டயலாக் தான் சந்தானம் படத்தின் டைட்டிலாக இருக்கும். இப்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் வரும் ‘இங்க நான் தான் கிங்கு’ என்ற டயலாக்கை டைட்டிலாக வைத்துள்ளனர்.

MUST READ