Homeசெய்திகள்சினிமாசிம்புவின் அந்த பாடலிலிருந்து இன்ஸ்பயர் ஆனது தான் 'கனிமா' பாடல்.... சந்தோஷ் நாராயணன்!

சிம்புவின் அந்த பாடலிலிருந்து இன்ஸ்பயர் ஆனது தான் ‘கனிமா’ பாடல்…. சந்தோஷ் நாராயணன்!

-

- Advertisement -

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ரெட்ரோ படத்தில் இடம் பெற்ற கனிமா பாடல் குறித்து பேசி உள்ளார்.சிம்புவின் அந்த பாடலிலிருந்து இன்ஸ்பயர் ஆனது தான் 'கனிமா' பாடல்.... சந்தோஷ் நாராயணன்!

சூர்யாவின் 44 வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்த நிலையில் அடுத்தது ரசிகர்கள் பலரும் ரெட்ரோ திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இப்படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், ட்ரெய்லர்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தன. அதிலும் சூர்யா, பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள கனிமா பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடி, இசையமைத்து, நடனமும் ஆடியிருப்பார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பாடலை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் எக்கச்சக்கமான ரீல்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். சிம்புவின் அந்த பாடலிலிருந்து இன்ஸ்பயர் ஆனது தான் 'கனிமா' பாடல்.... சந்தோஷ் நாராயணன்!இந்நிலையில் இந்த பாடல் குறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார். அதன்படி அவர், “ரெட்ரோ படத்தின் ‘கனிமா’ பாடல், ‘என் ஆசை மைதிலியே’ பாடலில் இருந்து ஈர்க்கப்பட்டது. இசைக்கருவிகள், சவுண்ட் மிக்ஸ் ஸ்டைல் போன்றவை அதிலிருந்து ஈர்க்கப்பட்டதுதான். விரைவில் இந்த பாடலுக்கான தனி பிரேக்டவுன் வீடியோவை உருவாக்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ