பரம்பொருள் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது.
சரத்குமார் மற்றும் அமிதாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பரம்பொருள். இந்த படத்தை அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். எஸ் பாண்டி குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது. கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
மேலும் இப்படத்தினை வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் பாடல் 11 மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் அடியாத்தி எனும் பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த வீடியோவில் இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் காட்டப்படுகின்றனர்.
So kicked to share this with you all tomorrow. Here’s a glimpse of what we’ve been working on. #Adiyaathi from #ParamporulMovie releasing tomorrow. @anirudhofficial@realsarathkumar @amitashpradhan @aravind275 @kashmira_9 @KavingarSnekan @u1records @onlynikil @gobeatroute pic.twitter.com/6qKm5hdlUa
— Raja yuvan (@thisisysr) August 7, 2023
ஏற்கனவே பரம்பொருள் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்பது அறிந்ததே. தற்போது படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை அனிருத் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே விஜயின் மாஸ்டர் படத்தின் ஒரு பாடலை அனிருத் இசையமைக்க யுவன் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.