Homeசெய்திகள்சினிமாயார் வேணா வரலாம், விஜய் அரசியலுக்கு வந்தா வரவேற்போம்… ஆதரவாக பேசிய சரத்குமார்!

யார் வேணா வரலாம், விஜய் அரசியலுக்கு வந்தா வரவேற்போம்… ஆதரவாக பேசிய சரத்குமார்!

-

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் தனது 68 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில் சமீபகாலமாக விஜய் அரசியலுக்கு வர இருப்பது குறித்த பல செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தை சார்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். அதிலிருந்து விஜய் தனது பெயரையும் புகைப்படங்களையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்கள் ‘வருங்கால முதலமைச்சர் தளபதி வாழ்க’ என்று கோஷமிட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது.
இது தொடர்பாக ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளன்று மதுரையில் மாநாடு நடக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

இது குறித்து பிரபல நடிகரான சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

நடிகர் சரத்குமாரும் அசோக் செல்வனும் இணைந்து நடித்த ‘போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது சரத்குமாரிடம், விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சரத்குமார் “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்” என தெரிவித்துள்ளார்.

MUST READ