நடிகர் சரத்குமார், சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுவர். இவருக்கும் இவரது முதல் மனைவி சாயாதேவிக்கும் வரலட்சுமி, பூஜா என இரு மகள்கள் இருக்கிறார்கள். ஒரு சில காரணங்களால் சரத்குமார் – சாயாதேவி இருவரின் திருமண வாழ்க்கை முறிந்த நிலையில் இரண்டாவதாக நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார். அதேசமயம் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி ஒரு நடிகையாக வலம் வருபவர்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2 போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்த வரலட்சுமி தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். அதைத்தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.