Homeசெய்திகள்சினிமாசந்திரபாபு நாயுடுவுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய ராதிகா சரத்குமார்

சந்திரபாபு நாயுடுவுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய ராதிகா சரத்குமார்

-

விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இதைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். இத்திரைப்படத்தின் வரலட்சுமியின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. தொடர்ந்து விக்ரம் வேதா, சர்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதில் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார்.

வில்லி வேடத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வரலட்சுமிக்கு அடுத்தடுத்து வில்லியாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. விஷால் நடித்த சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்திருப்பார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் நாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதனிடையே, வரலட்சுமிக்கும், அவரது காதலரும் தொழில் அதிபருமான நிகேலாய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இருவரின் திருமணமும் வரும் ஜூலை மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரலட்சுமியின் குடும்பத்தினர், திரையுலக நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். ரஜினி, கமல் ஆகியோருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லி சென்ற சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும், தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ