சரத்குமார் நடிக்கும் தி ஸ்மைல் மேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இளம் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதே சமயம் நடிகர் சரத்குமார் நடிப்பில் தி ஸ்மைல் மேன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் சரத்குமாரின் 150 வது படமாகும். இந்த படத்தை ஷியாம் பிரவீன் இயக்கியிருக்கிறார். இதில் சரத்குமார் உடன் இணைந்து இனியா, சிஜா ரோஸ், ஜார்ஜ் மரியான், ஸ்ரீகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தை மேக்னம் மூவிஸ், வெட்னஸ்டே ஸ்டோரிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இந்த படமானது வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வரும் என படக் குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.