Homeசெய்திகள்சினிமாசேரன் இயக்கத்தில் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படம்..... வதந்திக்கு முற்றுப்புள்ளி!

சேரன் இயக்கத்தில் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படம்….. வதந்திக்கு முற்றுப்புள்ளி!

-

- Advertisement -

டாக்டர் ராமதாஸாக நடிக்கும் சரத்குமார்..... மீண்டும் இயக்குனர் சேரனுடன் கூட்டணி!பிரபல இயக்குனர் சேரன் மண்மனம் மாறாத கதையம்சங்களை கொண்ட படங்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதேசமயம் நடிப்பதிலும் ஆர்வமுள்ள சேரன் ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாக சேரன் நடிப்பில் தமிழ் குடிமகன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சோனி லைவ் ஓடிடி தளத்திற்காக சேரன் இயக்கிய ஜர்னி வெப் தொடர் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. அடுத்ததாக சேரன், கன்னட நடிகர் கிச்சா சுதீப் – ஐ இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் – இன் வாழ்க்கை வரலாறை படமாக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டர் ராமதாஸாக நடிக்கும் சரத்குமார்..... மீண்டும் இயக்குனர் சேரனுடன் கூட்டணி!டாக்டர் ராமதாஸாக நடிகர் சரத்குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அதே சமயம் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக டாக்டர் ராமதாஸ், தன்னுடைய வாழ்க்கை வரலாறு படமாக வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளாராம். இதன் மூலம் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படம் சம்பந்தமான வதந்திக்கு முற்றுப்புள்ளி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ