பிரபல நடிகர் சரத்குமார் தனது மகள் வரலட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் பல குணச்சித்திர வேடங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக அனுமான் திரைப்படத்திலும் அடுத்ததாக ராயல் படத்திலும் கடைசியாக வெளியான அனுமான் திரைப்படத்திலும் அடுத்ததாக வெளியாக உள்ள ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச் தேவ் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சியம் செய்து கொண்டனர். அதே சமயம் திரை பிரபலங்களும் ரசிகர்களும் வரலட்சுமி சரத்குமாருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புது மண பெண்ணாக வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய 39 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவ்வேளையில் பிரபல நடிகரும் வரலட்சுமி சரத்குமாரின் தந்தையுமான சரத்குமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது அன்பு மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ” என் அன்பு வரு… இந்த பிறந்தநாள் உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள். இது உன் வாழ்க்கையில் புதிய பயணத்திற்கு அழைத்து செல்கிறது. அன்பும் அரவணைப்பும் கொடுக்கும் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துள்ளாய். தெய்வத்தின் அருள் உங்கள் இருவரையும் நீண்ட நாள் அன்பாக வாழ வைக்கும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரு” என்று தனது மகளுக்கு மிகவும் அன்பாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சரத்குமார்.