சர்தார் 2 படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு மெய்யழகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து வெளியான கங்குவா படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார் கார்த்தி. மேலும் வா வாத்தியார், கார்த்தி 29 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் கார்த்திவுடன் இணைந்து மாளவிகா மோகனன், எஸ் ஜே சூர்யா, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சர்தார் முதல் பாகத்தை போல் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே மற்ற அப்டேட்டுகள் அனைவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது. அடுத்தது சர்தார் 2 படத்தின் டீசர் 2025, மே 25 நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் எனவும் இப்படமானது 2025 ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.