Homeசெய்திகள்சினிமாசசிகுமார், பரத் கூட்டணியில் புதிய படம்!

சசிகுமார், பரத் கூட்டணியில் புதிய படம்!

-

- Advertisement -

சசிகுமார், பரத் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.சசிகுமார், பரத் கூட்டணியில் புதிய படம்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் தற்போது மை லார்ட், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்கள் உருவாகி இருக்கிறது. விரைவில் இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சசிகுமார், பரத் கூட்டணியில் புதிய படம்!

அதேசமயம் காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பரத், வெயில், பழனி, கண்டேன் காதலை உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் காளிதாஸ் 2 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சசிகுமார், பரத் ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். சசிகுமார், பரத் கூட்டணியில் புதிய படம்!இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம். குரு இயக்குகிறார். இதில் மேகா ஷெட்டி, மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ