சசிகுமார் நவீன் சந்திரா காம்போவில் உருவாகியுள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
அயோத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சசிகுமார் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர் டி எம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்தப் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சசிக்குமாருடன் இணைந்து நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு எவிடன்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் நவீன் சந்திரா தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.