Homeசெய்திகள்சினிமாசசிகுமார், சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சசிகுமார், சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

-

- Advertisement -
kadalkanni

சசிகுமார், சிம்ரன் நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.சசிகுமார், சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சசிகுமார் கடைசியாக நந்தன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஃப்ரீடம், எவிடன்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவர் நடித்திருக்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வருகின்றன. இதற்கிடையில் இவர் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்க அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று இருந்தது. அதேசமயம் சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டது. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

MUST READ