Homeசெய்திகள்சினிமாசசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’…. முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை ஜெய் பீம் மணிகண்டனின் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்ள ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் டப்பிங் பணிகள் போன்ற பின்னணி வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கியது. சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!அதாவது டைட்டில் டீசரை பார்க்கும்போது இந்த படம் காமெடி கதைக்களத்தில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது. மேலும் இந்த படமானது விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முகை மழை எனும் முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

MUST READ