சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்திருக்கும் டூரிஸ்ட் பேமிலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சசிகுமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நந்தன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது ஃப்ரீடம், எவிடன்ஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் இவர் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, கமலேஷ், ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கியிருக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் படப்படிப்பு ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு டூரிஸ்ட் ஃபேமிலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தது இந்த டீசரில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் கணவன் மனைவியாக நடித்திருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் தனது இரண்டு மகன்களுடன் ஊரை விட்டு செல்ல முடிவெடுத்து கிளம்புகின்றனர்.
அதனை காமெடியாக காட்டி இருக்கின்றனர். எனவே இந்த படம் காமெடி கலந்தக்கதைகளத்தில் உருவாகி இருக்கும் போல் தெரிகிறது. மேலும் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் இலங்கை தமிழில் பேசுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசர் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. மேலும் இந்த டீசரின் இறுதியில் இந்த படம் 2025-ல் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.