வதந்தி சீசன் – 2வில் சசிகுமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வதந்தி எனும் வெப் தொடர் வெளியானது. இதனை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருந்தார். கிரைம் திரில்லர் ஜானரில் வெளியான இந்த வெப் தொடரில் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து லைலா, நாசர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். சுழல் வெப் தொடரை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இதனை தயாரித்திருந்தார். சைமன் கே கிங் இதற்கு இசையமைக்க சரவணன் ராமசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார். இந்த வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக வதந்தி வெப் தொடரின் சீசன் 2 தற்போது உருவாக இருக்கிறது. இந்த வெப் தொடரில் நடிகர் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
நடிகர் சசிகுமார் தற்போது ஃப்ரீடம், மை லார்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.