சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டுக்கு சசிகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது வெளியாகும் படங்களில் சிறந்த படங்களை பார்த்துவிட்டு உடனே பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் ‘அயோத்தி‘ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ மதங்களைத் தாண்டி மனிதம் போற்றி அனைவரது இதயங்களையும் வென்றது ‘அயோத்தி’. நீண்ட நாளுக்குப் பிறகு சசிகுமாருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது அயோத்தி.
இந்நிலையில் ரஜினி வெளியிட்டிருந்த பதிவில்,
அயோத்தி…
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினியின் பாராட்டுக்கு சசிகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார் 🙏
#SuperStar #PettaMalik https://t.co/GKSlupIKLQ— M.Sasikumar (@SasikumarDir) April 11, 2023
“நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்” என்று சசிகுமார் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.