சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு பேரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து ஈசன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். பின் நடிப்பதில் ஆர்வம் காட்டிய சசிகுமார் நாடோடிகள், சுந்தர பாண்டியன், தாரை தப்பட்ட உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கியிருந்த அயோத்தி திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்க போவதாகவும் அது படமா அல்லது வெப் தொடரா என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
‘AndaPinda’ First Single from #NaaNaa is out now🎵
🔗https://t.co/Y4W5yHbR5D
Starring Sasikumar & Sarathkumar pic.twitter.com/lDbcB5M4uS— AmuthaBharathi (@CinemaWithAB) December 1, 2023
இதற்கிடையில் நடிகர் சரத்குமாருடன் இணைந்து நா நா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சலீம், சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களை இயக்கிய நிர்மல் குமார் இயக்கியுள்ளார். கல்பதரு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் சம்பந்தமான ஜானரில் இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் அதைத் தொடர்ந்து, டிரைலரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின் அண்ட பிண்ட எனும் முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.