நடிகர் சசிகுமார் டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கிய உள்ளார். குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ், பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் நாளை (ஏப்ரல் 23) இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சசிகுமார் இப்படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “இந்த படத்தின் கதையை கேட்டதும் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆரம்ப முதல் இறுதி வரை இந்த படத்திற்கு எந்த மாற்றமும் தேவையில்லை.
It’s been long since I heard a story like #TouristFamily & absolutely no changes from my side👌🎯. Some directors may think to pitch this script to a better hero, but I know they won’t go, coz no hero will accept to play father of 16 yrs son😂”
– Sasikumarpic.twitter.com/DYWVW9FGlw— AmuthaBharathi (@CinemaWithAB) April 22, 2025
அப்படியே எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஏனென்றால் டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரி ஒரு கதையைக் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. என் பக்கத்திலிருந்து இந்த படத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. சில இயக்குனர்கள் இந்த ஸ்கிரிப்ட்டை வேறு ஒரு நல்ல ஹீரோவிடம் சொல்லலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படி போகமாட்டார்கள் என்று எனக்கு தெரியும். ஏனென்றால் வேற எந்த ஹீரோவும் 16 வயது பையனுக்கு அப்பாவாக நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.