Homeசெய்திகள்சினிமாசசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்'.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

சசிகுமார் நடிக்கும் மை லார்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்'.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சசிகுமார் ஆரம்பத்தில் ஒரு இயக்குனராக திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களை பிசியாக நடித்து வரும் சசிகுமார் தற்போது ஃப்ரீடம், எவிடன்ஸ், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், ஜோக்கர், குக்கூ, ஜப்பான் ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்'.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு மை லார்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தது இந்த போஸ்டரில் சசிகுமார் மற்றும் சைத்ரா ஆகிய இருவரும் தம் அடிப்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படமானது விரைவில் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ