சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டில் கருடன், நந்தன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் நடிகர் சசிகுமார் ஃப்ரீடம், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் கிடா பட இயக்குனர், அயோத்தி பட இயக்குனர் ஆகியோருடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர், ஜோக்கர், குக்கூ, ஜப்பான் ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 26) காலை 11 மணியளவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. ஏற்கனவே ராஜு முருகன், சசிகுமார் கூட்டணியிலான புதிய படத்திற்கு மதர் இந்தியா என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.