சசிகுமார் நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர் சசிகுமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நந்தன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது எவிடன்ஸ், பிரீடம் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சசிகுமார். மேலும் இவர், டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், கமலேஷ், யோகி பாபு ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கியிருக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டப்பிங் பணிகளும் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
#TouristFamily – DUBBING STARTS 🎙️✨
Written & directed by @abishanjeevinth 🎬
A @RSeanRoldan musical 🎶 @SasikumarDir @SimranbaggaOffc @Foxy_here03 @barathvikraman @MillionOffl @MRP_ENTERTAIN@Yuvrajganesan @mageshraj @MithunJS5 @iYogiBabu @thilak_ramesh@thinkmusicindia… pic.twitter.com/ywmQ18QcXe— Million Dollar Studios (@MillionOffl) December 14, 2024
சசிகுமார் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து கலகலப்பான டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.