சசிகுமார் நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சசிகுமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ஃப்ரீடம், மை லார்ட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சசிக்குமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்க ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்துள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இப்படத்தில் இருந்து வெளியான டைட்டில் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
நாளை என்ற நம்பிக்கையில்
நாட்கள் இங்கே ஓடும்#TouristFamily x 5PM ⏳ pic.twitter.com/igjGnpUJYi— Million Dollar Studios (@MillionOffl) March 25, 2025
அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று (மார்ச் 25) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இந்த அறிவிப்பு இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.