கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் சசிகுமார். அதைத்தொடர்ந்து 2010ல் ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று தந்தது.
அதன் பிறகு நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் இயக்குனராகம் தகவலை பகிர்ந்திருந்தார்.
தற்போது அவர் வெப் தொடர் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த வெத்தொடர் வேலராமமூர்த்தி குற்ற பரம்பரை என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட உள்ளது. இந்த குற்ற பரம்பரை நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பேசக்கூடியது. இது பாரதிராஜாவின் கனவு திட்டம் ஆகும். ஒரு சில காரணங்களால் பாரதிராஜா இந்த படத்தை இயக்க முடியாத காரணத்தால் தற்போது சசிகுமார் அதனை ஒரு வெப் தொடராக இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.