சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
நடிகர் சசிகுமார் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இருப்பினும் நடிப்பதில் ஆர்வமடைய இவர் நாடோடிகள், சுந்தரபாண்டியன் என பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சசிகுமார். இன்னும் சில படங்களில் கமிட் ஆகி இருக்கும் சசிகுமார் இரா. சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். ஆர் வி சரண் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். பஞ்சாயத்து தலைவர்கள் பலரின் துயர கதையை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. நடிகர் சசிகுமார் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் சசிகுமாரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் படத்தினை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் இந்த படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. எனவே இந்த படத்தினை ரசிகர்கள் பலரும் ஓடிடியிலும் பார்த்து ரசித்து பாராட்டி வருகின்றனர்.