Homeசெய்திகள்சினிமாசசிகுமாரின் அடுத்த படம்..... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 5 திரை பிரபலங்கள்!

சசிகுமாரின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 5 திரை பிரபலங்கள்!

-

சசிகுமாரின் அடுத்த படம்..... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!நடிகர் சசிகுமார், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து ஈசன் என்ற படத்தை இயக்கினார் சசிகுமார். இப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதைத் தொடர்ந்து சசிகுமார், படம் நடிப்பதில் ஆர்வம் காட்ட தொடங்கி விட்டார். அதன்படி நாடோடிகள், சுந்தர பாண்டியன், போராளி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டில் சசிகுமார் நடிப்பில் அயோத்தி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். அந்த வகையில் சரத்குமார் உடன் இணைந்து நா நா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் எவிடென்ஸ் எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.சசிகுமாரின் அடுத்த படம்..... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

இந்நிலையில் சசிகுமார் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சத்ய சிவா எழுதி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சசிகுமார். இந்த படத்தை விஜய ஞானபதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 4.30 மணி அளவில் வெளியாக இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அனுராக் காஷ்யப், கிச்சா சுதீப், தேவி ஸ்ரீ பிரசாத், ஜிவி பிரகாஷ், உன்னி முகுந்தன் ஆகிய பிரபலங்கள் வெளியிடவுள்ளனர். மேலும் இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ