Homeசெய்திகள்சினிமா'கான்ஜுரிங் கண்ணப்பன் 2' படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டது.... உறுதி செய்த சதீஷ்!

‘கான்ஜுரிங் கண்ணப்பன் 2’ படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டது…. உறுதி செய்த சதீஷ்!

-

நடிகர் சதீஷ் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களின் பணியாற்றி வந்தார். 'கான்ஜுரிங் கண்ணப்பன் 2' படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டது.... உறுதி செய்த சதீஷ்!அடுத்தது நாய் சேகர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சதீஷ் கான்ஜுரிங் கண்ணப்பன் எனும் ஹாரர் திரில்லர் படத்தில் நடித்து பெயர் பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து சதீஷ் ஹீரோவாக நடித்திருந்த வித்தைக்காரன் திரைப்படம் வெளியானது. இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக நடிகர் சதீஷ், கான்ஜுரிங் கண்ணப்பன் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்திருந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் சதீஷ் இதனை உறுதி செய்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “கான்ஜுரிங் கண்ணப்பன் 2 படத்தின் கதை எழுதும் பணிகள் தொடங்கிவிட்டது. முதல் பாகத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்களை இரண்டாம் பாகத்திலும் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

கான்ஜுரிங் கண்ணப்பன் முதல் பாகத்தில் சதீஷ் உடன் இணைந்து விடிவி கணேஷ், ஆனந்தராஜ், நாசர், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிவரும் நாட்களில் கான்ஜுரிங் கண்ணப்பன் 2 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ