Homeசெய்திகள்சினிமாஇரும்புக்கை மாயாவி படத்துல நீ நடிச்சே ஆகணும்னு லோகேஷ் சொல்லிட்டாரு... அசத்தல் அப்டேட் கொடுத்த சதிஷ்!

இரும்புக்கை மாயாவி படத்துல நீ நடிச்சே ஆகணும்னு லோகேஷ் சொல்லிட்டாரு… அசத்தல் அப்டேட் கொடுத்த சதிஷ்!

-

- Advertisement -

நடிகர் சதிஷ் இரும்புக்கை மாயாவி படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். 

லோகேஷ் தற்போது இந்தியாவின் மோசட் வான்டெட்ட் இயக்குனராக உருவெடுத்துள்ளார். அவர் தற்போது விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

ஆனால் விக்ரம் படத்திற்கு முன்னரே சூர்யாவை வைத்து லோகேஷ் இரும்புக்கை மாயாவி என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். 

இந்தப் படம் காமிக் புத்தகமான தி ஸ்டீல் கிளாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,. 

சூர்யா உலோகக் கையால் குற்றவாளிகளை தீர்த்துக் கட்டும் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்பட்டது. அதையடுத்து படம் குறித்து எந்தத் தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. 

இரும்புக்கை மாயாவி படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். மாநகரம் படத்திற்குப் பிறகு, லோகி சகோதரர் இந்தக் கதையில் எனக்கு ஒரு செம கதாபாத்திரம் இருப்பதாகத் தெரிவித்தார். 

சமீபத்தில் CSK மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நான் தற்போது ஹீரோ ஆகிவிட்டாலும் கூட அந்தக் கதாபாத்திரத்தை நான்தான் செய்ய வேண்டும் என்று சொன்னார்.” என்று தெரிவித்துள்ளார். எனவே இன்னும் இரும்புக்கை மாயாவி படம் கைவிடப்படவில்லை என்பதை சதிஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

MUST READ