சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள சட்டம் என் கையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் சதீஷ் ஆரம்பத்தில் காமெடியனாக சினிமாவில் நுழைந்து விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அதன் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நாய் சேகர் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் சதீஷ். அதைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த கான்ஜுரிங் கண்ணப்பன் எனும் திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் வித்தைகாரன் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் கான்ஜுரிங் கண்ணப்பன் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் சதீஷ், சட்டம் என் கையில் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சிக்ஸர் படத்தின் இயக்குனர் சாச்சி எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சதீஷ் தவிர அஜய் ராஜ், வித்யா பிரதீப், மைம் கோபி குளித்த பலர் நடித்திருக்கின்றனர். பி வி ஆர் ஐநாக்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது.
பி ஜி முத்தையா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கும் நிலையில் எம் எஸ் ஜோன்ஸ் இந்த படத்தின் இசையமைக்கும் பணிகளை கையாண்டுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படமானது வருகின்ற செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.