Homeசெய்திகள்சினிமாசதீஷ் நடிக்கும் 'சட்டம் என் கையில்'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சதீஷ் நடிக்கும் ‘சட்டம் என் கையில்’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

சதீஷ் நடிக்கும் சட்டம் என் கையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சதீஷ் நடிக்கும் 'சட்டம் என் கையில்'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சதீஷ் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து பெயர் பெற்றவர். அதன் பின்னர் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான நாய் சேகர் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து காஞ்ஜுரிங் கண்ணப்பன் என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சதீஷ் தற்போது சட்டம் என் கையில் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சிக்ஸர் படத்தை இயக்குனர் சாச்சி எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சதிஷ் உடன் இணைந்து அஜய் ராஜ், வித்யா பிரதீப், மைம் கோபி, பவல் நவகீதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எம் எஸ் ஜோன்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்க பி.ஜி. முத்தையா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். பி வி ஆர் ஐநாக்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சதீஷ் நடிக்கும் 'சட்டம் என் கையில்'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!அந்த போஸ்டரில் நடிகர் சதீஷ் கைவிலங்குடன் துப்பாக்கி ஒன்றை வைத்திருக்கிறார். இந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் நீதியை தேடும்
ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களை வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ