நகைச்சுவை நடிகர் சதீஷ் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது வித்தைக்காரன் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த வெங்கி இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் கே விஜய் பாண்டி படத்தை தயாரித்துள்ளார். விபிஆர் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் சதீஷ்க்கு கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரமேஷ் திலக், ஆனந்தராஜ், தங்கதுரை, ஜான் விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
வித்தை காரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
Excited to unfold #Vithaikkaaran Teaser ▶️
My warm wishes to the team 👍@actorsathish #SimranGupta @WCF2021 @vijaywcf @Venki_dir @Vairamuthu @vbrcomposer @iamyuvakarthickhttps://t.co/sk73CHoiEm
— G.V.Prakash Kumar (@gvprakash) July 22, 2023
அதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை ஜிவி பிரகாஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து வெளியிட்டுள்ளனர்.இதன் மூலம் சதீஷ் இந்த படத்தில் மெஜிசியனாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இப்படம் கொள்ளை அடித்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.