சதீஷின் சட்டம் என் கையில் திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.
நகைச்சுவை நடிகராக தனது திரைப்படத்தை தொடங்கி நாய் சேகர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கியவர் நடிகர் சதீஷ். அதைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வித்தைக்காரன் எனும் திரைப்படமும் வெளியானது. இந்த நிலையில் தான் நடிகர் சதீஷ் சட்டம் என் கையில் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தை சாச்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் சதீஷ், வித்யா பிரதீப், மைம் கோபி, அஜய் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பி வி ஆர் ஐநாக்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க பிஜி முத்தையா இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார். எம் எஸ் ஜோன்ஸ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் நேற்று (செப்டம்பர் 27) திரையிடப்பட்டது.
#SattamEnKayil – The Film getting good response from Critics..💥 Said to be a good watch for Thriller fans..⭐pic.twitter.com/y6E3HouZCQ
— Laxmi Kanth (@iammoviebuff007) September 28, 2024
ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் ஊடகத்தினர் மத்தியிலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆகையினால் இந்த படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.