நடிகர் சத்யராஜ், வா வாத்தியார் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் ஏற்கனவே ஹீரோ, வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ். இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் வா வாத்தியார் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியிருக்கிறார். இதில் கார்த்தியுடன் இணைந்து கிரித்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சத்யராஜ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் வா வாத்தியார் படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “இந்த படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். வித்தியாசமான வில்லனாக நடித்திருக்கிறேன். இரண்டு ரோல்களில் நடித்திருக்கிறேன். டீசரில் ஒரு கெட்ட தான் காண்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.