Homeசெய்திகள்சினிமாசத்யராஜ் நடிக்கும் 'தோழர் சேகுவேரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சத்யராஜ் நடிக்கும் ‘தோழர் சேகுவேரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

சத்யராஜ் நடிக்கும் 'தோழர் சேகுவேரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!1990 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். தற்போது இவர் பல படங்களில் குணசேத்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள வெப்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சத்யராஜ். மேலும் ஜாக்சன் துரை 2 போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் நடிகர் சத்யராஜ் சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் காமெடி காட்சிகளில் பட்டைய கிளப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சத்யராஜ் நடித்துள்ள தோழர் சேகுவேரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சத்யராஜுடன் இணைந்து மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை ஏடி அலெக்ஸ் என்பவர் எழுதி இயக்குகிறார். படத்திற்கு பிஎஸ் அஸ்வின் இசையமைக்கிறார். சாம் ஆலன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மேலும் இந்த படத்தை கிரே மேஜிக் கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
சத்யராஜ் நடிக்கும் 'தோழர் சேகுவேரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தற்போது இப்படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ