டார்க் காமெடி படத்தில் இணையும் சத்யராஜ்- வெற்றி
- Advertisement -
கோலிவுட் திரை உலகில் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவரான வெற்றியும், சத்யராஜும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்தி மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். சேகர் ஜி புரொடக்சன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த புதிய படம் டார்க் காமெடி கதை அம்சத்தில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் இளம் நாயகன் வெற்றி நடிக்கிறார். இவர் ஜீவி, ஜீவி 2, வனம், 8 தோட்டாக்கள், பம்பர் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதில் 8 தோட்டாக்கள் திரைப்படமும், ஜீவி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தில் வெற்றியுடன் இணைந்து, சத்யராஜ், எம்.எம்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோடியில் ஒருவன் மற்றும் குரங்கு பொம்மை படத்தில் பணியாற்றி ஆர்.உதயகுமார் படத்திற்கு இசை அமைக்கிறார். ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசை அமைக்கும் இப்படத்திற்கு ராமர் படத்தொகுப்பாளராக பணி புரிகிறார். இவர் முன்னதாக, அசுரன், வடசென்னை மற்றும் விடுதலை ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்குகிறது. முழுவீச்சில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல படங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.