விடாமுயற்சி படத்திலிருந்து ‘Sawadeeka‘ பாடல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 62 வது படமாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தினை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்க ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து ரெஜினா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தன.
#Sawadeeka 🕺💃 is out on streaming platforms ⚡️⚡️⚡️
Lyric video at 5.05pm
Dearest AK sir #MagizhThirumeni https://t.co/WEQhm3XRhN
— Anirudh Ravichander (@anirudhofficial) December 27, 2024
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘Sawadeeka’ எனும் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ள நிலையில் அறிவு இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடலில் இடம்பெற்ற வரிகள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வெளியாகியிருப்பதனால் ரசிகர்களை பாடலைக் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று (டிசம்பர் 27) மாலை 5.05 மணி அளவில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.